ஆண்டிப்பட்டியில் சமுதாயக் கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா உட்பட்ட ரங்கசமுத்திரம் ஏடி காலனி பகுதியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடத்தை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் பேரூர் சரவணன் மற்றும் கிராம பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.