தேனி: சாக்கு பையில் மணல் திருடியவர் கைது

தேனி மயிலாடும்பாறை அருகே குமணன்தொழு பகுதியில் மயிலாடும்பாறை போலீசார் நேற்று(அக். 7) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சிறாற்றிலிருந்து பத்மநாதன் என்பவர் சாக்கு பையில் மணல் திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து பத்மநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி