கம்பம் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தென்னிந்திய சி எஸ் ஏ கிறிஸ்தவ திருச்சபை சார்பாக 2025 ஆம் ஆண்டுக்கான கொடியேற்றும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் திருச்சபையைச் சேர்ந்த போதகர்கள், கிறிஸ்தவ சமுதாயப் பெரியோர்கள், கிறிஸ்தவப் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.