தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டையில் கார்னல் ஜான் பென்னிகுக் நினைவாக ஊர் பொதுமக்கள் சார்பில் எல்லை மாட்டு வண்டி போட்டி நடத்தப்பட்டது. இந்த மாபெரும் போட்டியை அதிமுக சின்னமனூர் நகர் செயலாளர் பிச்சைக்கனி மற்றும் திமுக சின்னமனூர் நகர மன்ற தலைவர் முத்துக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.