ஆண்டிபட்டி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு

ஆண்டிபட்டி நகர் பகுதியில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன், பேரூராட்சி அலுவலர்கள் உணவகங்கள், பழக்கடைகள், டீக்கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களையும் இறைச்சிகளையும் கண்டறிந்து அந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து பின்னர் ஊற்றி அழித்து, பேரூராட்சி உரக்கிடங்கில் புதைக்கப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி