சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கம்பம் கிழக்கு வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். இதன் காரணமாக, காலை முதலே கம்பம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி