தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, தூவானம் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில், சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.