கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூமிநாதன், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி இன்று தனது இல்லத்தின் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய இவர், ஒவ்வொரு முறையும் இராயப்பன்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.