தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலர் சந்தையில் தொடர்ந்து வருகின்ற மூன்று நாட்கள் முகூர்த்த நாள் என்பதால், நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை இன்று (ஜூன் 05) ரூ. 800க்கு விற்பனையானது. முல்லை பூ மற்றும் ஜாதிப் பூ 600 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் பன்னீர் ரோஜா 220 ரூபாய்க்கும் செண்டு பூ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.