ஆண்டிபட்டி அருகே எலக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்து விபத்து

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இன்று காலை தனியார் மண்டபம் அருகே பைக்கில் இருந்து புகை வந்ததையடுத்து, ஓட்டுநர் பைக்கை நிறுத்திவிட்டு தள்ளிக்கொண்டு சென்றார். அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் பலனளிக்காமல், பைக் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி