உத்தமபாளையம் உடல் நலக்குறைபாட்டால் மூதாட்டி தற்கொலை

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த 60 வயதான பாப்பாத்தி, வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் அரளி விதைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி