தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தின் புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த ஐந்து ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.1000-லிருந்து ரூ.2000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பரப்புரையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.