தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறை காலனி பகுதியில் பழங்குடியினர்களுக்கு அரசு சார்பில் 24 வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கான நிலையில் வீடுகளின் மேற்கூறையில் மழை நீர் வழிந்து வீட்டிற்குள் தண்ணீர் தேங்கிறது. அரசு வீடுகளை பராமரிப்பு செய்ய பழங்குடியினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்று நேற்று (செப்.,5) ஆண்டிப்பட்டி வட்டாச்சியர் கண்னன் ஆய்வு மேற்கொண்டனர்.