சுருளி அருவியில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் பக்தர்கள் இவ்வாறு விரதம் இருப்பது வழக்கம். அதிகாலையிலேயே குடும்பத்துடன் வந்த பக்தர்கள், விநாயகர் சன்னிதி முன்பாக சாமி தரிசனம் செய்து, மாலை அணிந்து தங்கள் விரதப் பயணத்தைத் தொடங்கினர்.

தொடர்புடைய செய்தி