தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், புண்ணிய தலமாகவும் உள்ளதால், நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை சுருளி அருவி சாலையில் வென்னியாறு விலக்கு ஓடை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சுருளி அருவிக்கு குளிக்கச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.