ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விலை உயர்வை திரும்ப பெறவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், மக்கள் விரோத கொள்கையை கடைபிடிக்கும் பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி