கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அருகே 50 மாணவருடன் சுற்றுலாவிற்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து மூணாறு அருகே பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர் படுகாயம் அடைந்த மாணவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மருத்துவமனைக்கு நேரில் வருகை புரிந்து படுகாயம் அடைந்த உரிய முறையில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் ஆலோசனை வழங்கினார். மேலும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்