தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு 8-வது வார்டு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்படுகிறது அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். 25 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யாமல் இருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.