சின்னமனூர் ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் சிங்கத்துரை (40). இவர் மது குடித்துவிட்டு அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அவரது தந்தை முனியாண்டி வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன் தினம் சிங்கத்துரை மாமனார் வீட்டிற்கு சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட நிலையில் கோபம் அடைந்த முனியாண்டி அரிவாளால் சிங்கத்துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். போலீசார் முனியாண்டியை கைது செய்தனர்