ஆண்டிப்பட்டி: நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுாரைச் சேர்ந்த 24 வயது மகாலட்சுமி, சித்தையகவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து வந்து கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் செயினைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் நேற்று (மே 5) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி