குமுளி செல்லும் சாலையில் சரக்கு வாகனம் மீது பஸ் மோதி விபத்து

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே, மதன் (24) என்பவர் ஓட்டிச் சென்ற சரக்கு வாகனம் மீது, குமுளியிலிருந்து வந்த ராஜேஷ் ஓட்டிய சொகுசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த மதன் மற்றும் பாசில்கான் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி