ஆண்டிபட்டியில் பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் நரேந்திர மோடி அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்காக அவர் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் அமமுக, அதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.