சின்னமனூரில், ஒரு பெண் கடன் வாங்கி இருந்த நிலையில், பணம் செலுத்திய பின்னரும் வட்டி கேட்டு மிரட்டிய பாஜக நகர தலைவர் சிங்கராஜா, அப்பெண்ணையும் அவரது மருமகளையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் சிங்கராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.