ஆண்டிபட்டி: சமையல் செய்யும்போது உடையில் தீப்பிடித்ததில் பெண் உயிரிழப்பு

ஆண்டிபட்டியை அடுத்த ராஜதானி ஒக்கரைப்பட்டியில் வசிக்கும் முருகன் மனைவி மீனா (46), சமையல் செய்துகொண்டிருந்தபோது அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி