தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு 4வது முறையாக விசைத்தறி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று 24வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்