கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(பிப் 9)பிக்கப் கனரக வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து சம்பவம் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தை அப்புறப்படுத்தியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.