கம்பம் சிறுவன் மீது பைக் மோதி விபத்து

கம்பம் பகுதியை சேர்ந்தவர் பௌர்ணமி. இவரது எட்டு வயது மகன் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது 15 வயது சிறுவன் பைக்கை ஓட்டி வந்து எட்டு வயது சிறுவன் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் சிறுவன் படுகாயங்கள் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து 15 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி