ஆண்டிப்பட்டி: கடை வீதியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

ஆண்டிப்பட்டி கடைவீதி பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி கடையில் நேற்று (மே 6) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி, கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தற்போது தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி