உழவு மிஷினை திருடிய 2 வாலிபர்கள் கைது

கண்டமனூரைச் சேர்ந்த பாலகுருசாமி(87), கணேசபுரம் செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரே விவசாய நிலத்தில், செட்டில் வைத்திருந்த ரூ. 66 ஆயிரம் மதிப்புள்ள உழவு மிஷினை காணவில்லை என செப். 25 அன்று கண்டமனூர் போலீசில் புகார் அளித்தார். பிறகு போலீசார் தேடி வந்த நிலையில், கண்டமனூர் புதுக்காலனி முத்துராஜ்(25), சத்தியா காலனி நாகபிரபு(30) திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி