தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான பிச்சம்பட்டி, கன்னியப்பிள்ளை பட்டி, ஏத்த கோவில் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் நிலவும் அதிக பனிமூட்டம் காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக, பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ. 8,000 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.