கன்னியாகுமரியில் காங்கிரஸ் பிரமுகர் மீது போலீசார் திருட்டு வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மைக் கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர்களை இடித்துக் கட்டுமானப் பொருட்களைத் திருடியதாக பேரூராட்சித் தலைவர் எட்வின் ஜோஸ் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ளார்.