பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் சகோதரர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய 47 வயது பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை ரவீனா டாண்டனின் சகோதரரான ராஜீவ் டாண்டனின் வீடு மும்பையில் உள்ளது. இந்த வீட்டில் நடிகையின் வயதான தாயார் வீணா டாண்டன் வசித்து வருகிறார். அவரை பராமரிக்கும் பணிப்பெண்ணான ராஷி சப்ரியா, ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.