சென்னை எழும்பூரில் உள்ள பேபி ஆல்பர்ட் தியேட்டருக்கு நேற்று (மார்ச் 2) ஒரு குடும்பம் படம் பார்க்க சென்றுள்ளது. அவர்கள் வாங்கிய ஜூஸ் கெட்டுப்போய் இருந்த நிலையில், கேண்டீன் ஊழியர்களிடம் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில் தற்போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு, காலாவதியான பொருட்கள் இருப்பது உறுதியான நிலையில், கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நன்றி: NewsTamilTV24x7