உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்த யூடியூப் இணையதளம் சீரானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். முடங்கியிருந்த யூடியூப் இணையதளத்தின் முகப்பு பக்கம் தற்போது சீராக இயங்கி வருகிறது. இன்று காலையில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் சரிசெய்தனர். பல கோடிக்கணக்கில் பயனர்களை கொண்டுள்ள யூடியூப் திடீரென முடங்கியது பயனர்களை அவதியடையச் செய்தது.