உலகின் மிகப்பழமையான டோக்கன்பர்க் ஆடுகள்

சுவிட்சர்லாந்து நாட்டின் டோக்கன்பர்க் பள்ளத்தாக்கை பூர்வீமாகக் கொண்ட டோக்கன்பர்க் ஆடுகள், உலகின் மிகப்பழமையான மற்றும் அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் பால் ஆடு இனமாக கருதப்படுகிறது. குளிர்ச்சியான காலநிலைகளிலும் மலைப்பகுதிகளிலும் எளிதில் வளரக்கூடிய இந்த ஆடுகள், அடர் சாக்லேட் முதல் வெளிவண்ண நிறங்களுடன் வெள்ளை நிற அடையாளங்களை கொண்டு தனித்துவமாக விளங்குகின்றன. மனிதர்களுடனும் பாசமாகவும் நட்புணர்வுடனும் பழகும் தன்மை கொண்டதால், குடும்ப பண்ணைகளிலும் வளர்ப்போரிடையேயும் இவை மிகவும் பிரபலமாக உள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕