பின்லாந்து அரசு அணுமின் நிலைய கதிரியக்க கழிவுகளை பாதுகாப்பாக சேமிக்க, பூமிக்கடியில் சுமார் 450 மீட்டர் ஆழத்தில் 'ஒன்காலோ' என்ற உலகின் முதல் நிரந்தர நிலத்தடி மையத்தை உருவாக்கியுள்ளது. இங்கு பல அடுக்கு பாதுகாப்பு முறைகளுடன் புதைக்கப்படும் அணுக்கழிவுகள், மனிதர்களுக்கும் சுற்றுப்புறத்திற்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை மிகப்பத்திரமாக பராமரிக்கப்படவுள்ளன.