ராமநாதபுரத்தில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இளம்பெண் அண்மையில் உயிரிழந்தார். ஆனால் கால்வாய் இன்னும் மூடப்படாமல் இருப்பதை கண்டித்து பொதுமக்கள் நேற்று (அக். 4) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, ”பெண் இறந்த பிறகு சிறுவன் ஒருவனும் கால்வாயில் விழுந்துவிட்டான். நல்வாய்ப்பாக அவனை தூக்கி விட்டு காப்பாற்றினோம். பல இடங்களில் திறந்துள்ள கால்வாய்களை மூட வேண்டும்.” என்றனர்.
நன்றி: NewsTamil 24X7