திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இன்று (டிச.2) தனது 93 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழ் மக்கள் நலமே தமது நலமாய், சமூகநீதி காப்பதே தன் வாழ்க்கைக் கடமையாய்ச் செயல்படும் மூப்பினை வென்ற மூவாப் போராளி கே.வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.