ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்களை ஈரான் தாக்கியதை கண்டித்து அமெரிக்கா இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த மோதலால், கச்சா எண்ணெய் விலை சுமார் 3% உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75.54 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 71.81 டாலராகவும் வர்த்தகமானது. பதற்றம் அதிகரித்துள்ளதால், எண்ணெய் விநியோகம் தடைபடும் என்ற அச்சம் நிலவுகிறது.