“ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டில் இபிஎஸ் ஆட்சியில்தான் கொலை, கொள்ளை நடந்தது. இதெல்லாம் இபிஎஸ்-க்கு கை வந்த கலை” என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், “இவருடைய பழைய கதைகளை நாங்கள் பேசத் தொடங்கினால் என்னாகும்?. இப்போதுதான் ஒவ்வொரு தீர்ப்பாக வந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது போல், கொடநாடு வழக்கில் தீர்ப்பு வரும், தண்டனை கிட்டும்” என்றார்.