தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தி மொழியின் பயன்பாடும் விரிவடைய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தி ஆலோசனை குழு கூட்டத்தில் பேசிய அவர், இந்தி நாட்டை ஒருங்கிணைக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்றும், அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களில் எளிய இந்தியை பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.