குழந்தைகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றும் அவலம்!

இந்தியாவில் கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் அரங்கேறும் கொடூரச் செயல்களை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பூசாரி ஒருவர் இரண்டு சிறு குழந்தைகள் மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார். சூடு தாங்காமல் குழந்தைகள் கதறியழுதும் இந்த கொடூரச் செயல் தொடர்கிறது. பச்சிளம் குழந்தைகளைத் துன்புறுத்தும் இந்த மூடநம்பிக்கைக்கும், கொடூரத்திற்கும் இணையத்தில் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி