“திக பாராட்டு விழா பல சாதனைகள் படைக்க ஊக்கமளிக்கிறது”.. மு.க.ஸ்டாலின்

கோவை வ.உ.சி. பூங்காவில் இன்று (நவ.4) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில், “இந்தப் பாராட்டை மேலும் பல சாதனைகள் படைப்பதற்கான ஊக்கமாக எடுத்துக்கொள்கிறேன். தகுதியுள்ளவனாக என்னை மேலும் வளர்த்துக்கொள்வேன். பெரியார் கொள்கைகளை மலைபோல் காப்பவர் கி.வீரமணி; என்னையும் காத்தவர் அவர்தான்” என்று புகழாரம் சூட்டினார். இந்தப் பாராட்டுக்கு மேலும் சிறப்பான பணிகள் மூலம் தகுதியானவனாக மாறுவேன் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

✕
✕