"தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள்" - டிடிவி தினகரன் சாடல்

மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, வேலூரில் செங்கல் சூளைகளில் மாடூல் கேட்டு மிரட்டல், செங்கல்பட்டு அருகே நகைக்காக மூதாட்டி கொலை என கடந்த ஒரு வாரத்தில் தொடர் குற்றங்கள் அரங்கேறியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள் என்பதுதான், ஆளுங்கட்சி என்ற மமதையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட துணிகின்றனரா? என்பதை முதலமைச்சர் விஜய் விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி