டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் ஒரு மாபெரும் சாதனையாளரா அல்லது ஆபத்தான மனிதரா என்ற கேள்வியுடன் உருவாக்கப்பட்டுள்ள 'MUSK' என்ற புதிய ஆவணப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இயக்குநர் அலெக்ஸ் கிப்னி இயக்கியுள்ள இந்த சுமார் 4 மணிநேர ஆவணப்படம், அமெரிக்கத் திரையரங்குகளில் வரும் அக்.16-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.