வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி பொய் வழக்கு தொடர்ந்ததால், ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் நூதன போராட்டத்தை தொடங்கியுள்ளார். மாமியாரின் வீட்டுக்கு முன் டீ கடை ஒன்றை அமைத்து, கையில் விலங்கு மாட்டிக் கொண்டு டீ விற்று வருகிறார். வரதட்சனை வழக்கை குறிக்கும் வகையில் கடைக்கு '498A T Cafe' என பெயரிட்டுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் வரை, இங்கு டீ கொதிக்கும் என கடையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.