கோடை வெயில் நெருங்கும் நிலையில், மார்ச் மாத முதற்பகுதியிலேயே வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர், சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால் மக்கள் வாகனங்களில் அதிகளவில் எரிபொருளை நிரப்பி வருகின்றனர். வெயில் காலத்தில் ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்புவது ஆபத்தானது என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். கடந்த காலங்களில் வாகனங்கள் தீப்பிடித்து விபத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி: News18