சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மார்ச் 29) திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொறுத்தாத நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும். முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்” என அறிவித்துள்ளார்.