"தவெகவின் நிலைமை பரிதாபம்".. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

"தவெக-வைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “அதிமுக - திமுக இடையே தான் போட்டி, இதுதான் கள நிலவரம். அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும். தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்” என்றார்.

தொடர்புடைய செய்தி