திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து கூட்டணி விவகாரம் நீடித்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. திமுக 170 இடங்களில் போட்டி என்ற ராஜகண்ணப்பன் பேசிய செய்தியை பகிர்ந்து மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, “அதிகாரப் பகிர்வு அவசியம், ஆட்சி பங்கு எங்கள் உரிமை. "2021-ல் 173-ல் போட்டியிட்டு 133 வெற்றி; நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைத் தான்" என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: நியூஸ்18